உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா கொடியேற்றம்:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா கொடியேற்றம்:



செய்யாறு செப்.23,


செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலுபூஜை திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி பிரதான சாலையில் கூழமந்தல் அடுத்து உள்ளது உக்கல் கிராமம் .இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளிஉள்ளது.


நேற்று முன்தினம் 21ஆம் தேதி கொடியேற்றும் வைபவத்துடன் நவராத்திரி கொலு பூஜை திருவிழா தொடங்கியது. கொடியேற்ற வைபவத்தை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தி வைத்தார் .மேலும் நேற்று யாகசாலை வேள்வி பூஜைகளை நடத்தி பூரண பட்டு ஆக்குருதி நிகழ்வு நடந்தது. பின்னர் ஆராதனை நடைபெற்றது.


மேலும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நவராத்திரி கொலு திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். துவக்க விழாவில் அறக்கட்டளை தலைவர் எஸ். பிரபு ,செயலாளர் பி .லட்சுமி, பொருளாளர் எம் .சங்கர் உள்ளிட்ட விழா குழுவினர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%