
பாக்தாத், ஜூலை 17–
ஈராக்கில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 மாடி அடுக்குமாடிகளை கொண்டது. இந்த மாலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 மாடி ஷாப்பிங் மாலில், ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழு அறிக்கை தரப்படும் என அந்நாட்டு கவர்னர் கூறியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக ஷாப்பிங் மால் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?