மதுரை, இளமனூர் அரசு மேனிலைப்பள்ளியில் 'ஊழலை ஒழிப்போம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் கனகலட்சுமி தலைமை வகிக்க, ஆசிரியை இராணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். கனராவங்கி கருப்பாயூரணிக் கிளையின் மேலாளர் இராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் சமயத்துரை, மகாலட்சுமி, ஓவியா, சாருலதா ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கினார். கனரா வங்கியின் தீபன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%