இரிடியம் விற்பதாக மோசடி நெய்வேலியில் 7 பேர் கைது

இரிடியம் விற்பதாக மோசடி நெய்வேலியில் 7 பேர் கைது

நெய்வேலி:

நெய்வேலியில் இரிடியும் விற்பதாக மோசடியில் ஈடுபட்ட 7 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.



கடலுார் மாவட்டம், நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 30, திடீர்குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 49; இவர், தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும், இதனை கூட்டாக சேர்ந்து விற்பனை செய்தால் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக் கலாம் என, தனது கூட்டாளிகள் திருக்கோவிலுார் கேசவன், 48; அரியூர் ஏழுமலை, 43; நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை மணிகண்டன் 41; நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30ஐ சேர்ந்த ஆனந்தன், 38; கடலுார், கூத்தப்பாக்கம் விக்னேஸ்வரன், 33; பூராசாமி மகன் பிரவீன்குமார, 28; ஆகியோரிடம் கூறினார்.



தகவலறிந்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் போலீசார், முருகனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு இரிடியம் விற்பனை தொடர்பாக பேசினர். போலீஸ் எனத் தெரியாமல் அவர்களை, முருகன் திடீர்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று வரவழைத்தார்.



அங்கு சென்ற போலீசார், இரிடியத்தை காட்டுமாறு கூறியதும், முருகன் 6 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டு பேரம் பேசினார்.



சந்தேகமடைந்த போலீசார், முருகனிடம் நடத்தி ய விசாரணையில், கூட்டாளிகளுடன் சேர்ந்து மோசடியாக இரிடியம் விற்க முயன்றதை ஒப்புக் கொண்டார் .



உடன், முருகன் மற்றும் அங்கு பதுங்கியிருந்த கூட்டாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, தெர்மல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து முருகன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து, போலி இரிடியத்தை பறிமுதல் செய்தனர்.



சதுரங்க வேட்டை படம் பாணியில் ஆட்டம் காட்டிய மோசடி கும்பல் கைதான சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%