சனிக்கிழமை என்றால் அதில்
தனித்துவம் உண்டு என்பதை
பணியில் இருப்பவர்கள் உணர்வர்.
மாதத்தில் வரும் இரண்டாம் சனிக்கிழமை அதில் விதிவிலக்கல்லவே.... கனியென இனிக்க காரணம்
விடுமுறை மட்டுமல்ல விடியலில்...
கடும் முனகலுடன் எழ வேண்டாம்...
சாலை பயணத்தில் தடுமாற வேண்டாம்...
சோலை போன்ற இடத்தில் நடக்கலாம்
ஐந்து கிழமைகளிலும் அல்லல் பட்டதில்...
ஆறாம் நாள் இரண்டாம் சனிக்கிழமை என்றால் மாறா மகிழ்ச்சி பெருக்கெடுக்க... அலுப்பும் சலிப்பும் விடை பெற.... கலகலவென ருசிக்க வைக்கும் தினமன்றோ...
உஷாமுத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%