இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

துணுக்குப் பகுதி 


 


   கேரட், காலிப் பிளவர் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.

     விஷம் முறிய சிறியா நங்கை தொடர்ந்து சாப்பிட குணமாகும்.

     வேப்ப இலையை வேக வைத்து லேசான சூட்டுடன் வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக்கட்டினால் வீக்கம் குறையும்.

      நாவல் மர பட்டையும் மா மரப் பட்டையும் சேர்த்துக் கஷாயம் போட்டு வாய் கொப்பளித்தால் வாய்ப் புண் ஆறி விடும்.

       அத்திப் பழம் சாப்பிட அம்மை நோய் விரைவில் குணமாகும்.

       புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

       வெந்தயம் கல்லீரல் வீக்கம், இருமல், வயிற்று வலிக்கு சிறந்தது.

     வயிற்று புண் ஆற அதிமதுரத்தை கஷாயம் வைத்து குடிக்க ஆறும்.

      முலாம்பழம் அடிக்கடி சாப்பிட சிறு நீர்க் கோளாறு நீங்கும்.

     நாவல் பழத்தை சாப்பிட்டு வர கண் எரிச்சல், நீர் வடிதல் நிற்கும்.

     ஒரே நேரத்தில் நெய்யும் தேனும் கலந்து சாப்பிடக் கூடாது.

      அருகம்புல் வேர் அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட இரத்த மூலம் அகலும்.

     புதினா, கொத்தமல்லி இலையை அரைத்து உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும்.

     நெஞ்சு வலி குறைய இலந்தை பழம் சாப்பிடவும்.

     தினசரி ஒரு பேரிக்காய் சாப்பிட இதய பட படப்பு நீங்கும்.

     பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வர புதிய இரத்தத்தை உருவாக்கும்.

     கண் குளிர்ச்சி பெற சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சி அடையும்.


       தொகுப்பு 

M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல் துறை (ஓய்வு )

வளையாம்பட்டு போஸ்ட் 

வாணியம்பாடி-635751

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%