கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குனர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) நாகராஜன் (ராமநாதபுரம்), ஆதிநாதன் (தென்காசி) கண்ணன் (தூத்துக்குடி) கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன், வேளாண்மை துறை அதிகாரிகள் காயத்ரி, நரேஷ் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிடங்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த கி்டங்கு விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. விருதுநகரில் உள்ள இயற்கை உர கடையில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த இயற்கை உரங்கள் (biostimulant) ஊத்துப்பட்டியில் உள்ள கிடங்கில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்து இருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின் படி சட்டவிரோதம் என்பதால் கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?