நகர்புறங்களைக் கடந்து கிராமங்கள் தோறும்.. ஒவ்வொரு தெருவிலும் இந்த ஊர்வலம் உண்டு!
நாதஸ்வரத்திற்கு தலையை ஆட்டி.. தங்கச் சரிகை சதங்கைகள் மாட்டி.. கொம்புகளுக்கு வண்ணங்கள் தீட்டி.. சிவனின் வாகனமாய் வலம் வரும் பூம் பூம் மாடுகள்!
தெருமுனை அங்கே திரண்டனர் மக்கள் .. பாம்பிடாரன் வித்தை பார்க்க.. யாரும் நகர்ந்தால் ரத்தம் கக்குவான் எனறே மிரட்டி காசு கேட்கும் பாம்பாட்டி.. கடைசி வரையிலும் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்காது.!
நட்ட நடு வீதியில் கழுத்தில் கயிறுடன் கர்ணம் அடிக்கும் வித்தைக் குரங்குகள்..
குழந்தைகள் உடம்புக்கு நல்லது என்று குட்டியும் தாயுமாய் கழுதை நடக்க பினனே குழந்தைகள்..
சோதிடக்கிளிகள் கூண்டுக்குள் இருந்து இராவணன் படத்தை எடுத்துக் கொடுத்து நெல்மணி கொத்தும் சிகப்பு மூக்கு பச்சைக்கிளிகள்!
இவைவகளைக் கடக்காத இளைஞர்கள் இல்லை.. எத்தனை ஆண்டுகள் ஆயினும் என்ன? மறக்க இயலா வீதி உலாக்கள்!
சின்னஞ் சிறு விலங்குகள் பறவைகள் மனிதனை காப்பாற்ற செய்கிற தியாகங்கள்! வணங்குவோம் வாரீர்!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?