இனி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..
Jul 30 2025
12

சமீப ஆண்டுகளாகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் குடும்பத் தலைவிகளின் நலன் கருதி முக்கிய திட்டங்கள் பலவற்றை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதில் பிரதானமாக பார்க்கப்படுவது மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை திட்டம். தமிழ்நாடு உள்பட பல மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதி உடைய பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதே போல மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, அசாம் என பல மாநிலங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது.
தேர்தல் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு இந்த திட்டமானது முக்கியத்துவத்தை பெற்றுள்ளது எனலாம். இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்னும் 8 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. அங்கு தற்போது முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில பெண்களுக்கு குஷி தரும் விதமாக முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சதவீத பெண் வாக்காளர்கள் புதுச்சேரியில் தான் உள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 2024 மக்களவை தேர்தல் புள்ளி விவர அடிப்படையில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில், 53.03% அதவாது 5,42,979 பேர் பெண்கள் ஆவர். எனவே, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 என்ற இந்த திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவில் நடைமுறைபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?