வாஷிங்டன், நவ. 5–
இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள அமெரிக்கா தீவிர விவாதங்களை நடத்தி வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேசுகையில், பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள். அதிபரும் அவரின் வர்த்தகக் குழுவும் இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
சமீபத்தில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போதும், ஓவல் அலுவலகத்திலிருந்து பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசினார். அப்போது அவருடன் மூத்த இந்திய –அமெரிக்க அதிகாரிகளும் உடனிருந்தனர். அதிபர் டிரம்ப், இந்திய - அமெரிக்க உறவில் உறுதியாக உள்ளார்’’ என்று தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பேச்சுவார்த்தையை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இருப்பினும், இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்க விரும்புவதாக டிரம்ப் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதேவேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மாநிலை செய்தித்தொடர்பாளர் கரோலின் கடந்த சில நாட்களுக்குமுன் அளித்த பேட்டியில், வர்த்தகம் பிற ஒப்பந்தங்கள் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் அடிக்கடி பேசி வருகின்றனர்’ என்றார். இந்த நிலையில் டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேசி வருவது வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. டிரம்ப்பும், மோடியும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? . பிரதமர் மோடி எதற்கு பயப்படுகிறார்? என பதிவிட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?