இந்தியாவின் மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய, தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இந்தியாவின் மிகச்சிறந்த நம்பிக்கைக்குரிய, தொழில்மயமான மாநிலம் தமிழ்நாடு’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



திறன்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு கவனம் செலுத்துகிறது என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,


தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-


“முதலீட்டு ஊக்குவிப்பு என்பது சாதாரண விளையாட்டு அல்ல. முதலீடு எந்த இடத்திற்கு செல்கிறதோ அதைப்பொறுத்து ஊக்கத்தொகை வழங்குவது, மாநிலத்தின் தேவை மற்றும் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே சமநிலையை உருவாக்குவது உள்ளிட்டவை அதில் அடங்கும்.


பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்குவதே நமது முதல்-அமைச்சரின் நோக்கம். அதுவே நமது இலக்கு. எனவே, முதலீடுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் அடித்தளம் என்பது ஒருவர் எங்கு தொழில் செய்ய விரும்புகிறார் என்பதைப் பொறுத்து அமையும்.


இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அரசாங்கங்கள் தங்கள் பலம் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயல்படுகின்றன. சில அரசாங்கங்கள் வறண்ட நிலங்களின் பெரிய நிலப்பரப்புகளைக் கொண்டிருந்தாலும், மற்றவை அதிக மதிப்புள்ள நிலங்களைக் கொண்டுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மற்றும் ஊக்கத்தொகையின் மதிப்பை ஒப்பிடாமல் அந்த நிலங்களை சாதாரணமாக கொடுத்துவிட முடியாது.


நம்பத்தகாத தொகுப்புகளை வழங்குவதற்காக நாங்கள் எந்த நேரத்திலும் அடிமட்ட போட்டிக்கு செல்லமாட்டோம். நமது உழைப்பாளர்களிடம் இருக்கும் பல்வேறு வகையான திறன்களின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு கவனம் செலுத்துகிறது.


தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகமான, தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமாகும். நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட ஒரு உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். எங்களுக்கு எங்கள் மதிப்பு தெரியும், எங்கள் பலம் தெரியும், நாங்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.


எதிர்க்கட்சியின் சில பிரதிநிதிகள், தமிழகத்தின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளி அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிடவும், மாநிலத்தின் கடின உழைப்பாளி மக்களை அவமதிக்கவும் விரும்பினாலும், நாங்கள் அதிக முதலீடுகள் குறித்த அறிவிப்புகளால் அவர்களின் விஷ வாயை மூட விரும்புகிறோம்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%