இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா

இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா

வாஷிங்டன்:

இந்​தி​யா​வால் தேடப்​படும் முக்​கிய நபர் உட்பட 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அமெரிக்க புல​னாய்​வுத்​துறை (எப்​பிஐ) கைது செய்​தது.


இந்​தி​யா​வில் குற்றச் செயல்​களில் ஈடு​பட்ட காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள், ரவுடிகள் பலர் அமெரிக்கா மற்​றும் கனடாவுக்​குள் சட்​ட​விரோத​மாக செல்​லும் சம்​பவங்​கள் கடந்த சில ஆண்​டு​களாக நடை​பெற்று வந்​தது. இவர்​கள் அங்​கும் ஆயுதங்​களை காட்டி மிரட்​டு​தல், ஆள்​கடத்​தல், சித்​ர​வதை போன்ற குற்​றங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.


இவர்​களில் முக்​கிய​மான நபர் பவித்​தர் சிங் பதாலா. இவர் பாபர் கல்சா இன்​டர்​நேஷனல் (பிகேஐ) என்ற தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்​தவர். பல தீவிர​வாத வழக்​கு​களில் தொடர்புடைய இவரை தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தேடி வந்​தது.


இந்​நிலை​யில் பவித்​தர் சிங் பதாலா உட்பட 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அமெரிக்க புல​னாய்வு அமைப்பு (எப்​பிஐ) கடந்த வெள்​ளிக்​கிழமை கைது செய்​தது. இவர்​கள் சான் ஜோகு​வின் மாகாணத்​தில் ரவுடி கும்​பல் போல் செயல்​பட்டு ஆள் கடத்​தல், சித்​ர​வதை செய்​தல் போன்ற சம்​பவங்​களில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களை கைது செய்ய உள்​ளூர் போலீ​ஸாரும், எப்​பிஐ குழு​வினரும் முடிவு செய்​தனர். பல இடங்​களில் நடத்​தப்​பட்ட தேடு​தல் வேட்டை மூலம் பவித்​தர் சிங் பதாலா, தில்ப்​ரீத் சிங், அம்​ரித்​பால் சிங், அர்​ஷ்ப்​ரீத் சிங், மன்ப்​ரீத் ரந்த்​தா​வா, சரப்​ஜித் சிங், குர்​தஜ் சிங் மற்​றும் விஷால் ஆகிய 8 காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​கள் வைத்​திருந்த சட்​ட​விரோத இயந்​திர துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அமெரிக்க மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக இவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர் என அமெரிக்​க போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%