ஆடி மாதம் 2 -ஆம் வெள்ளிக்கிழமை துர்க்கை பூஜை, ராஜமாதங்கி பூஜை, குத்துவிளக்கு பூஜை.....

ஆடி மாதம் 2 -ஆம் வெள்ளிக்கிழமை துர்க்கை பூஜை, ராஜமாதங்கி பூஜை, குத்துவிளக்கு பூஜை.....

 திருவண்ணாமலை 26.07.2025 ஸ்ரீ அருள்மிகு வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை காலையில் துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை அபிஷேகம், அலங்காரங்களுடன் மாலை 6.00 மணி அளவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் பாலசுப்ரமணியன் குருக்கள், கணேஷ் ஐயர் அவர்களால் மூலவர்க்கும், உற்சவருக்கும் மிகச் சிறப்பாக அபிஷேகங்கள், அலங்காரங்கள் ஆர்ய வைஸ்ய மகிளா சபா தலைவி திருமதி.ஷகிலா பாபு அவர்கள், செயலாளர் ஜோதி ரங்கநாதன், பொருளாளர் கீதா ஸ்ரீதர் மற்றும் ஆர்ய வைஸ்ய சமாஜ சமூகத் தலைவர் SDR. பாபு அவர்கள், ஆர்ய வைஸ்ய சமாஜத் தலைவர் AC. மணிகண்டன் அவர்கள், பொருளாளர் p. தனபால் அவர்கள், செயலாளர், NTPS. வெங்கட பாலகிருஷ்ணன் அவர்கள், மற்றும் சமாஜ உறுப்பினர்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு மாதங்கி பூஜையும், குத்துவிளக்கு பூஜையும் பெண்கள் அனைவரும் பச்சைக் கலரில் புடவை உடுத்தி, பாட்டுக்கள் பாடி, மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பிரசாதங்களுடன் நெய்வேத்தியம் மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். வெகு சிறப்பாக நேர்த்தியாக அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%