ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு
Oct 31 2025
24
லாஸான்: சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி கடந்த வாரம் திடீரென விலகியது. இதைடுத்து மாற்று அணி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பதிலாக ஓமன் அணி சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இந்தியா இடம் பெற்றுள்ள ‘பி’ பிரிவில் ஓமன் அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் சிலி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளும் உள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?