அவள் - மழை - நான் !

அவள் - மழை - நான் !


'மழைப்பொழிவில் நனைந்து கரைந்து போன உன் ஒப்பனையற்ற முக அழகு இன்னும் பேரழகு ...!'


'படைச்சாரலில் குடையுடன் பயணிக்கும் வர்ண குடையை விட உன் நடை இன்னும் பேரழகு !


"மழைக்கும் உன்னை தழுவ வேண்டுமென்று பேராசை போல அதனால் தான் நீ பயணிக்கும் போதெல்லாம் மழையும் உன்னுடன் பயணிக்கிறது !'


"உன்னை கண்ட மகிழ்ச்சியில் தானோ சில நேரங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்கிறது !'


'உன் முகத்தின் பருக்கள் மீது பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகள் விலை மதிப்பற்றவை '


"சில நாட்களாக மழை மேகம் கூட இல்லையே ... ஓ. நீ ஊருக்குள் இல்லையோ... சீக்கிரமாய் வா பெண்ணே....ஊர் மழையின்றி வறண்டுவிடப்போகிறது .



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

PH:9894236348

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%