
சென்னை.ஆக. 16-
ஆர்.எஸ்.எஸ் மனநிலையுடன் எப்போதும் தமிழக அரசுப் பள்ளிகள் மீதுகவர்னர்ரவி அவதூறு பரப்பி வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
‘தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக’கவர்னர் ரவி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடிகொடுத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் பதிவு வருமாறு-
ஆர்.எஸ்.எஸ் மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநரே! ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக்கல்வி த்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்தி காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும், திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது. கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்,”.
இவ்வாறு அவர்கூறிஉள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?