அறிவியல் படிப்போம்
குழந்தைகளே
அணுவினைப் புரிவோம்
குழந்தைகளே!
அறிவினைப் பெறுவோம்
குழந்தைகளே
அறிஞராய் ஆவோம்
குழந்தைகளே!
புதியநல் கருவி
காண்போமே
பொலிவுடன் பயனைப்
பூண்போமே!
இதயமே எற்று
மகிழ்வோமே
ஈடிலா இன்பம்
அடைவோமே!
முன்னவர் ஆய்வை
அறிவோமே
மூத்தவர் அறிவைப்
புரிவோமே!
உன்னத மாக
வாழ்வோமே
உயரிய கொள்கை
சூழ்வோமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%