அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தஞ்சாவூர் எம்.பி., பாராட்டு
Jul 11 2025
81

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி
தஞ்சாவூர், ஜூலை 9- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, “பள்ளிகளைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர்’’ என்ற திட்டத்தின் கீழ், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி நேரில் சென்று, பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறார். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாட்டாத்திக்கோட்டை, சித்துக்காடு, களத்தூர், கொன்றைக்காடு, சொர்ணக்காடு, பைங்கால் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரணிக்காடு அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கும் சென்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சால்வை பதக்கம் அணிவித்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?