அரசுத் திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுத் திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு வெள்ளிக் கிழமையன்று (01.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத் தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன் படுத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. அதேபோல அரசுத் திட்டங்களின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், “அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல் படுத்துவதற்கு எதிராக தாங்கள் எந்த உத்தரவும் பிறப் பிக்கவில்லை” என்ற நீதிபதிகள், “தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது” என்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%