அமெரிக்காவில் 17 நீதிபதிகளைநீக்கினார் டிரம்ப்

அமெரிக்காவில் 17 நீதிபதிகளைநீக்கினார் டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் 10 மாகாணங்களில் பணியாற்றி வந்த குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகள் 17 பேரை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பணி நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டது.அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பலர் குடியேற்ற நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்கின்றனர். நீதிபதிகள் நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை விதிக்கின்றனர்.இது போன்று நாடு முழுதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், குடியேற்ற நீதிபதிகள் 17 பேரை எந்த காரணமும் சொல்லாமல் டிரம்ப் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த முடிவுக்கு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%