news Breaking News
clock

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

சென்னை:

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1035 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வார இறுதி நாட்களில் பயணிக்க 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News