அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் ஆலோசனை

அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் ஆலோசனை



ஜெனிவா: ரஷ்யா - உக்​ரைன் இடையே அமைதி ஏற்பட அமெரிக்கா கூறும் 28 அம்ச திட்​டங்​கள் குறித்​து, ஜெனி​வா​வில் மேற்​கத்​திய கூட்​டணி நாடு​களு​டன் உக்​ரைன் பேச்​சு​வார்த்தை நடத்தி வருகிறது.


ரஷ்யா - உக்​ரைன் இடையே அமை​தியை ஏற்​படுத்​தும் பணி​யில் அமெரிக்கா ஈடு​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ரஷ்யா அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்​கெனவே பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.


28 அம்ச திட்டம்: இந்​நிலை​யில் 28 அம்ச திட்​டம் ஒன்றை அமெரிக்கா கொண்​டு​வந்​துள்​ளது. இது ரஷ்​யா​வுக்கு சாதகமாகவும், உக்​ரைனுக்கு பாதக​மாக​வும் இருக்​கும் என கூறப்படு​கிறது.


இது குறித்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கூறுகை​யில், இறையாண்மை உரிமையா அல்​லது அமெரிக்​கா​வின் ஆதரவா என்ற இரண்டு வாய்ப்​பு​களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​து உள்​ளார்.


அமெரிக்​கா​வின் இந்த அமைதி திட்​டம் குறித்து ஜெனி​வா​வில், மேற்​கத்​திய கூட்​டணி நாடு​களு​டன் உக்​ரைன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறது. இங்​கிலாந்​து, பிரான்ஸ் மற்​றும் ஜெர்​மனி​யின் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர்​களு​டன் முதல் கட்ட பேச்​சு​வார்த்தை நடத்தியுள்​ள​தாக உக்​ரைன் குழு​வின் தலை​வர் அண்ட்ரி யர்​மாக் தெரி​வித்​துள்​ளார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%