அப்துல்கலாம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர்.ஏ. பி. ஜே.அப்துல்கலாம் பிறந்த நாள் விழா!

அப்துல்கலாம் அமைப்பு சாரா  தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர்.ஏ. பி. ஜே.அப்துல்கலாம் பிறந்த நாள் விழா!


வேலூர், அக். 18-

வேலூர் மாவட்டம், குடியாத்தம்  பூ மார்க்கெட் குளத்தங்கரை பகுதியில் உள்ள 'தமிழ்நாடு டாக்டர் ஐயா ஏபிஜெ. அப்துல்கலாம் நம் உரிமை  அனைத்து வாகன ஓட்டுனர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின்' சார்பில்,முன்னாள் குடியரசு  தலைவரும், இந்தியாவின்  பெருமைக்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல்கலாமின் 95-வது பிறந்த நாள் விழா அக்.15-அன்று அச்சங்கத்தின் மாநில தலைவர். ஜெ.வினோத்குமார்  தலைமையில் கொண்டாடப்பட்டது.

அதில்,குடியாத்தம் நகர போக்குவரத்து துணை ஆய்வாளர்.சாமிக்கண்ணு மற்றும் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மண்டல செயலாளர் இராசி.தலித்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். மேலும், அப்துல்கலாம் அவர்களின் கனவை போற்றி  பின்பற்றி இயற்கையை மேம்படுத்தும் வகையில்,500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். மேலும் மாநில கவுரவத் தலைவர் ஸ்டீபன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%