அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் லேப்டாப், அம்மா மினி கிளினிக் திட்டம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி..!
Aug 07 2025
12

மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.
மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். இன்று தென்காசி குற்றாலத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது:-
இரண்டு முறை 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்தபோது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாருகின்ற சூழ்நிலையை உருவாக்கி தந்தோம்.
வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசாங்கம்.
விவசாயிகளுக்கென அதிமுக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. தற்போதுள்ள திமுக அரசு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறதா?
கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை.
தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்காத இடமே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் இனிமேல் பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அதிமுக ஆட்சியில் விலையில்லா மடிக்கணினி கொடுத்தோம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி தேவை?. 10 ஆண்டுகளில் 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாணவச் செல்வங்கள் அறிவுப்பூர்வமான கல்வி படிக்கும் சூழ்நிலையை அமைத்து கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதை நிறுத்திவிட்டாங்க.
மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.
அம்மா மினி கிளினிக். இதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி. எங்கெல்லாம் ஏழை மக்கள் வசிக்கிறார்களோ, அந்த பகுதியை தேர்ந்தெடுத்து அம்மா மினி கிளிக்கை திறந்தோம். அதையும் மூடியதுதான் இந்த ஸ்டாலின் ஆட்சி. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?