அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்வாகும் மிதுன் மன்ஹஸ்?

அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்வாகும் மிதுன் மன்ஹஸ்?

மும்பை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை - வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.


அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பிசிசிஐ-யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார்.


பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து அண்மையில் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி 70 வயதை கடந்​தவர்​கள் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்​கொண்​டிருந்​தார். வரும் 28-ம் தேதி மும்​பை​யில் பிசிசிஐ ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் புதிய தலை​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார்.


இந்த சூழலில்தான் அந்த பதவிக்கு மிதுன் விண்ணப்பித்துள்ளார். அவர் ஒருவர் மட்டுமே இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். பிசிசிஐ பொருளாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%