டெல்லியில் போலீசார் என்கவுன்டர்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை
Sep 22 2025
109
    
புதுடெல்லி, செப். 20–
டெல்லியில் இன்று அதிகாலை பிரபல ரவுடி கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்ற கும்பலுக்கும், மற்றொரு ரவுடியான டில்லு தாஜ்புரியா கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டு ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வது வழக்கம்.
இந்த இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் டெல்லி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், டெல்லியின் ரோகிணி காவல்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்கள் சில பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு சென்றனர். ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மர்ம நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், 2 பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் லாலு, இர்பான் மற்றும் நிலேஷ் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் சிக்கியவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்பவனின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?