✨✨✨✨✨✨✨✨✨
மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வைத்திருந்த அசாதாரணமான நிபந்தனைகளைக் கேட்டு வியப்படைந்தனர்.
ஆனால், இவை வரதட்சணை தொடர்பான கோரிக்கைகள் அல்ல; மாறாக, திருமண மரபுகளில் மரியாதை, எளிமை மற்றும் கண்ணியத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான நிபந்தனைகள்!
நகரம் முழுவதும் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் அந்த மாப்பிள்ளையின் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1️⃣ திருமணத்திற்கு முந்தைய (Pre-wedding) புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இருக்கக்கூடாது.
2️⃣ மணமகள் லெஹங்கா அணியாமல், புடவை மட்டுமே அணிய வேண்டும்.
3️⃣ சத்தமான, ஆபாசமான பாடல்களுக்குப் பதிலாக, திருமணத்தின்போது மென்மையான இசைக்கருவிகள் இசை மட்டுமே ஒலிக்கப்பட வேண்டும்.
4️⃣ மாலையிடும் (Varmala) சடங்கின்போது, மணமகனும் மணமகளும் மட்டுமே மேடையில் இருக்க வேண்டும்.
5️⃣ மாலையிடும்போது மணமகனையோ அல்லது மணமகளையோ தூக்க முயற்சிப்பவர்கள், உடனடியாக விழாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
6️⃣ திருமணங்கள் அவரவர் முறைப்படி அர்ச்சகர் வைத்தோ அல்லது அவர் தேவை இல்லாமலோ எளிமையாக நடத்தப்படுதல் வேண்டும் .
7️⃣ புகைப்படக் கலைஞரோ/வீடியோகிராபரோ தேவையில்லாமல் திருமண நிகழ்வுகளில் தலையிடவோ அல்லது புகைப்படம் எடுப்பதற்காகச் சடங்குகளை நிறுத்தவோ கூடாது — புகைப்படங்கள் மௌனமாகத் தூரத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும்.
8️⃣ புகைப்படக் கலைஞர்கள் சொல்வது போல் மணமகனும் மணமகளும் செயற்கையாகப் போஸ் கொடுக்கக் கூடாது.
9️⃣ திருமணச் சடங்கு பகலில் நடைபெற வேண்டும், மற்றும் மணமகளை வழியனுப்பி வைக்கும் (Bidaai) சடங்கு மாலைக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இது, விருந்தினர்களுக்கு இரவு தாமதமான உணவுகளால் (பெரும்பாலும் தூக்கமின்மை, அமிலத்தன்மை அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தும்) சிரமம் ஏற்படுவதைத் தவிர்ப்பதோடு,
அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் வீடுகளுக்கு வசதியாகத் திரும்பவும் உதவும்.
🔟 பொது இடத்தில் புதுமணத் தம்பதியினரை கட்டிப்பிடிக்கவோ அல்லது முத்தமிடவோ (hug or kiss) யாராவது சொன்னால்,
அவர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
⏸️ மாப்பிள்ளை தோழர்கள், நண்பர்கள் என்ற பெயரில் யாரும் குடித்துவிட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மணமகளின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
✨ இது சமூகத்தைச் சீர்திருத்துவதற்கான ஒரு அழகான படி — உண்மையிலேயே அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
திருமணம் என்பது ஒரு புனிதமான பிணைப்பு; ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்,
அது ஒரு விளம்பரத் திருவிழா அல்ல.
பாரம்பரியத்தை மதியுங்கள்,
கண்ணியத்தைப் பேணுங்கள்,
அர்த்தமற்ற ஆடம்பரங்களை, அவசியமற்ற சடங்குகளை, தேவையற்ற செலவுகளை குறையுங்கள். 🫵🏻🪷💐💐