THIRAN பயிற்சி வகுப்பு தண்டலை நடுநிலைப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை THIRAN அடிப்படை பயிற்சி கடந்த ஒரு மாதமாக தொடங்கி அனைத்து நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று திறன் பயிற்சி வகுப்புக்கான மாதிரி தேர்வினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் ஆய்வு செய்தார் மாணவர்களின் கற்றல் அடைவுகள் கற்றல் விளைவுகளை கேட்டறிந்தார் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் திறன் பயிற்சிகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆர்வத்துடன் ஈடுபட செய்திகளை எடுத்து வழங்கினார் பார்வையின் போது பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்கள் மாலதி, சரண்ராஜ் மற்றும் பிரதீபா ஆகியோர் உடன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?