இன்று யூடியூப் shorts முதல் இன்ஸ்டாகிராம் reels வரை அனைத்திலும் நாம் AI-யால் உருவாக்கப்பட்ட வீடியோக்களைப் பார்க்கின்றோம். இது ஒரு படி மேல் சென்று ‘எது நிஜமான வீடியோ?, எது AI?’ (AI videos) என்ற குழப்பத்தையும் நமக்குள் எழ வைக்கிறது. இந்தக் குழப்பத்திலிருந்து நாம் எப்படி விடுபடலாம்?
கவனிக்கும் திறன்: இன்றைய டிஜிட்டல் தளத்தில் மேம்பட்ட AIகளால் (AI models) உருவாக்கப்பட்ட செயற்கை வீடியோக்கள், பெரும்பாலும் மனித முகபாவனைகள், விலங்குகளின் அசைவுகள் அல்லது சுற்றுச்சூழலில் நடக்கும் விஷயங்கள் என்று; ஒரு அசாதாரண துல்லியத்துடன் நம் கண்முன் காட்டுகின்றன. இருப்பினும் கூர்மையாகக் கவனித்தால் அதன் நிஜ முரண்பாடுகளை உணரலாம்.
இயல்பாக மனிதர்களோ அல்லது விலங்குகளோ ஒழுங்கற்ற முறையில் கண் சிமுட்டுவார்கள் (blinks eyes irregularly). ஆனால், AI வீடியோ, பெரும்பாலும் மிகவும் சரியாக சிமிட்டும்படியோ (too perfect) அல்லது வினோதமாக மீண்டும் மீண்டும் சிமிட்டும் வடிவங்களை (repetitive) உருவாக்குகிறது. இதேபோல் கை சைகைகள், விரல் அமைப்புகளைச் சற்று இயற்கைக்கு மாறானதாக AI இல் பார்க்கலாம்.
மற்றொரு விஷயம் ஒரு வீடியோ காட்டப்படும் வெளிச்சத்தின் பின்னணி. AI வீடியோக்கள் சில நேரங்களில் நகரும் பொருள்களில் நிலையான வெளிச்சத்தைப் பராமரிக்கத் தவறிவிடுகின்றன (fail to maintain consistent illumination); இதனால் ஒரு பொருள் அல்லது உருவத்தின் பின்னணியில் உள்ள இடையில் ஒரு நுட்பமான வித்தியாசத்தைக் (Mismatch) காட்டுகின்றன.
வீடியோவில் எழும் சத்தங்களும் (Audio clues) சற்று கணிக்க உதவும். காரணம் AIயால் உருவாக்கப்பட்ட குரல்கள் மிக மென்மையாக (Smooth) ஒலிக்கக்கூடும். மனிதனின் சுவாசம் அல்லது சுற்றுப்புறச் சத்தத்தில் (ambient noise) நாம் இயற்கையாக உணரும் வேறுபாடுகள் (natural imperfections) இதில் இல்லாமல் இருக்கலாம். இவையெல்லாம் ஒரு வீடியோவாக பார்க்கும்போது, மிகவும் நிஜமாகவும் கச்சிதமாகவும் இருக்கும்; ஆனால் அதேநேரம் உயிரற்றதாகவும் அல்லது இயல்புக்கு மாறானதாகவும் நம்மை உணரவைக்கும்.
டிஜிட்டல் யுக்திகள்:
கம்ப்யூட்டர்: சிலர் உள்ளுணர்வைவிட தொழில்நுட்பத்தை விரும்புவார்கள். அவர்களுக்கு என பல கம்ப்யூட்டர் பயன்பாடுகள் (Tools) இப்போது உள்ளன. Google Gemini’s detector, Hive AI’s browser extension, and Tencent’s deepfake checker போன்ற விஷயங்கள் AI யா அல்லது உண்மையான வீடியோவா என்று பகுப்பாய்வு செய்கின்றன. இதோடு ‘AiVidect’ போன்ற பிரத்யேகத் தளங்களும் இதற்குத் தீர்வுகளை வழங்குகின்றன. இது ஒரு விடியோவின் எல்லா மூலைமுடுக்கிலும் AIயால் செய்யப்பட்ட தந்திரங்களை எடுத்துக்காட்டுகின்றன.
மொபைல் செயலிகள்:
Deepware Scanner, Sensity AI Mobile, DuckDuckGoose Deepfake Detector, True Media Detector, WeVerify Deepfake Detector, Sentinel AI Detector போன்ற மொபைல் செயலிகள் AIயால் உருவாக்கப்பட்ட வீடியோக்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றன.
கவனத்தில் கொள்ளவேண்டியவை: எந்தச் செயலியும் 100% கட்சிதமாகக் கண்டுபிடிப்பதில்லை. அறிவியல் வளர வளர அதிலும் சில பிழைகள் ஏற்படலாம். இதோடு சில செயலிகள் உங்கள் வீடியோவை பகுப்பாய்விற்காக ‘cloud’ எடுத்துக்கொள்கின்றன. அதனால் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் செயலியின் தனியுரிமைக் கொள்கையை (privacy policy) கண்டிப்பாகச் சரிபார்க்கவும். இதையும் சேர்த்து தொடக்கத்தில் குறிப்பிட்ட விஷயங்களையும் மனதில் வைத்து ஒரு விடியோவை பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.