அடகு கடையில் நள்ளிரவில் திருட்டு முயற்சியை தடுத்த உரிமையாளர்: பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது

அடகு கடையில் நள்ளிரவில் திருட்டு முயற்சியை தடுத்த உரிமையாளர்: பிஹாரைச் சேர்ந்த இளைஞர் கைது


 

சென்னை: பாடி, டிஎம்பி நகர், அண்ணா தெரு​வில் வசித்து வருபவர் கணேஷ் (34). மேற்கு முகப்​பேர், பள்ளி தெரு​வில் அடகுக் கடை நடத்தி வரு​கிறார்.


இந்த கடை​யில் பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா நேரடி காட்​சியை அவர் தனது செல்​போனில் பார்க்​கும் வசதியை வைத்​துள்​ளார். கடந்த 19-ம் தேதி இரவு கணேஷ் தனது கடையை வழக்​கம்​போல் பூட்​டி​விட்டு வீடு திரும்​பி​னார்.


நள்​ளிரவு சுமார் 11 மணி​யள​வில், அவர் தனது செல்​போன் மூலம் சிசிடிவி கேமரா காட்​சியை பார்த்​த​போது, ஒரு நபர் அடகுக் கடை​யின் பூட்டை பெரிய இரும்​புக் கம்பி​யால் உடைத்​துக் கொண்​டிருந்​தார். இது தொடர்​பாக அவர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.


தகவல் அறிந்து நொளம்​பூர் காவல் நிலைய ரோந்து போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​தனர். போலீ​ஸாரை கண்​டதும் அந்த நபர் தப்​பியோட முயன்​றார். அவரை போலீ​ஸார் விரட்​டிப் பிடித்து விசா​ரித்​தனர். இதில் பிடிபட்​டது பிஹார் மாநிலம், சமஸ்​திபூரைச் சேர்ந்த கோவிந்த்​கு​மார் சர்மா (28) என்​பது தெரிந்​தது.


இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். துரித​மாக செயல்​பட்டு தகவலை போலீ​ஸாருக்கு தெரி​வித்​த​தால் பெரிய அளவில் நடை​பெற இருந்த திருட்டு சம்​பவம் தடுக்​கப்​பட்​டது. அந்த அடகுக் கடை உரிமை​யாளரை போலீ​ஸார்​ வெகு​வாகப்​ பா​ராட்​டினர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%