11 பேர் பலிக்கு ஆர்சிபி நிர்வாகம் தான் காரணம் கர்நாடக அரசு அறிக்கை
Jul 19 2025
72

18ஆவது ஐபிஎல் இறுதி போட்டி யில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணி அபார வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் ஏற்பட்ட நெரிச லில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் ; பலர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி நிர்வாகமே காரணம் என்று கர்நா டக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,”11 பேர் உயி ரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலு க்கு ஆர்சிபி அணி நிர்வாகம் தான் கார ணம். காவல்துறையிடம் எந்த அனுமதி யும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்தி ற்கு ஆர்சிபி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமான முறையான அனுமதியைப் பெறவில்லை. ஜூன் 4ஆம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண் டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு 3 லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன் றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப் பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டி ருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்சிபி நிர்வாகமே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?