கோலாலம்பூர், நவ.1-
மலேஷியாவில் நடந்த, 'ஆசியான்' உறுப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாட்டில், இந்தியா–அமெரிக்கா இடையே, 10 ஆண்டுகளுக்கான ராணுவ செயல்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மந்திரி சபையில் ராணுவத்துறை மந்திரியாக பீட்டர் ஹெக்செத் பொறுப்பேற்றார்.
கடந்த ஜூலையில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா ராணுவ மந்திரியிடம் தொலைபேசியில் பேசினார்.
அப்போது இருநாட்டு ராணுவ உறவுகளை வலுப்படுத்த புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என முடிவானது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தேஜஸ் போர் விமானத்திற்கான ஜி.இ.எப். 404 என்ஜின்கள் அமெரிக்காவில் இருந்து கொள்முதல், இந்தியாவில் எப்-14 போர் விமானம் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜி.இ. ஏரோஸ்பேஸ் நிறுவனம் கைகோர்ப்பு உள்ளிட்டவை அடங்கியிருந்தன.
இருப்பினும் இருநாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக மோதலால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அமெரிக்கா ராணுவ மந்திரி பீட்டர் ஹெக்செத் பங்கேற்றநிலையில் இருநாடுகளிடையேயான 10 ஆண்டுகள் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
10 ஆண்டு ஒப்பந்தம்
இதுகுறித்து ராஜ்நாத் சிங், “அமெரிக்கா–-இந்தியா இடையேயான முக்கிய ராணுவ கூட்டாண்மை அமைப்புக்காக 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இது வளர்ந்து வரும் மூலோபாய ஒத்துழைப்புக்கான அடையாளம்” என்றார்.
பீட்டர் ஹெக்செத், “இந்த ஒப்பந்தம் எங்களுடைய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் முன்னேற்றும்.
இது ஆசிய- பசிபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும், அமைதிக்கும் தூணாக அமையும். ராணுவம் தொடர்பான ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தொழில்நுட்ப ஒத்திசைவு ஆகியவற்றை கூட்டாக இணைந்து மேம்படுத்து வோம்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?