" மெல்லிய இறகுகள் "

" மெல்லிய இறகுகள் "



மூச்சுக் காற்றின் மெல்லிய ரிதம்,


 ஒன்றாய் கலந்த சுருதி சுத்தம்.


 மோகன ராகத்தில் அவள் மட்டும் கேட்க....


அவன் இசைக்கும் காதலின் கீதம்.


 கண்கள் திறக்க மனமின்றிக் கிறங்கும் ஈருயிரின் ஏழு ஸ்வரம்.


 இறகுகள் கொண்டு இதமாய் வருடும்..


 இதய வீணையின்

புதிய கானம்... 


காற்றில் மிதந்து

வானம் எட்டும்,


 கவிதையான

இனிய தருணம்! 


கேட்கும் வரம்

உனக்கு அமைந்தால், 


வேறு என்ன

சுகம் வேண்டும்?!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%