news Breaking News
clock

*பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசுகள்.*

*பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசுகள்.*



வந்தவாசி, பிப் 10:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வடக்கு) மாணவர்களுக்கான கற்றல் திறன் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை வி.சுகன்யா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, மாணவர்களுக்கு அடிப்படை திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை எளிய முறையில் விளக்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி நூலகத்திற்கு தேசத் தலைவர்கள் புத்தகங்களும் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியை தவமணி நன்றி கூறினார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News