தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்தில் செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் கல்விக்கு இணையாக கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . சாரணர் இயக்கத்தை சார்ந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் "சீர்மிகு சாரணர்" தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேர்த்தியான சீருடை மற்றும் நிகழ்வூட்டும் சேவை ஆகிய தலைப்புகளில் ஜனவரி மாதம் சாரணர் இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆறாம் வகுப்பு மாணவன் சுதாகர் "சீர்மிகு சாரணர்" ஆக தேர்வு செய்யப்பட்டார். இன்றைய காலை வழிபாட்டு கூட்டத்தில் அம்மாணவனுக்கு தோள் பை பரிசாக வழங்கப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய மீனா பரிசினை வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவனை ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர். பள்ளியின் சாரண ஆசிரியர் செலஸ்டின் மகிமை ராஜ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?