*எரமலூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயாருக்கு விஷேச பூஜைகள்..!*
Feb 07 2026
62
வந்தவாசி, பிப் 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தை கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகள் கிளி மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிறகு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?