*இன்று சர்வதேச வேட்டி தினம் (ஜனவரி 6) - சிறப்பு தொகுப்பு*

*இன்று சர்வதேச வேட்டி தினம் (ஜனவரி 6) - சிறப்பு தொகுப்பு*



உலக பாரம்பரியங்களை காக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6 ஆம் தேதி 'சர்வதேச வேட்டி தினம்' கொண்டாடப்படுகிறது. 


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உயரத்தில் சற்று குறைந்தவர். பண்புகளில் நெடுதுயர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டி வந்த அவரை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சென்னை கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளும், கண்டன முழக்கங்களும் எழுந்தன. இதனை தொடர்ந்து தமிழக பெரிய ஓட்டல்கள் மற்றும் அனைத்து கிளப்புகளிலும் வேட்டி அணிந்து வருபவர்களை அனுமதிக்காவிட்டால் கிளப் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையில் அப்போதைய கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வேட்டி தினம் கடைபிடித்து அனைத்து ஊழியர்களும், மாணவர்களும் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதினார்.


குடும்ப விழா, கோவில் விழா, நாம் வழக்கமாக கொண்டாடும் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களில் வேட்டி அணிந்து கொள்வதையே பெருமையாக கருதுகிறோம். 

வேட்டி அணிந்து கொள்வதில் உள்ள சில சௌகரியம் பிற உடைகள் அணியும் போது கிடைக்காது. ஏன்..! வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கூட நம் பாரம்பரிய வேட்டியை கட்டிக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழரின் பாரம்பரிய வேட்டியை அனைவரும் அறிவோம்..!


சர்வதேச வேட்டி தின நல்வாழ்த்துக்கள்..!


தொகுப்பு: பா. சீனிவாசன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%