news Breaking News
clock

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் வானில் வட்டமிட்ட கருடன்..!*

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் வானில் வட்டமிட்ட கருடன்..!*


வந்தவாசி, செப் 05:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை உள்ளிட்டவை நடந்தேறியது. பிறகு பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் விஷேச திருமஞ்சனம் நடந்தேறியது. பூஜிக்கப்பட்ட புனித நீரானது மேளதாளத்துடன் கோவில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நேரத்தில் கருடன் மேலே வட்டமிட்டு இருந்ததை பார்த்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டனர். ‌

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News