வேலை வாங்கி தருவதாக ரூ.74லட்சம் மோசடி செய்தித்துறை அதிகாரி மீது வழக்கு
Jan 08 2026
15
தேனி, ஜன.- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.74லட்சம் மோசடி செய்ததாக செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், அவர் மனைவி மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் தாமரைக்குளம் மகாத்மா காந்தி தெரு வைச் சேர்ந்த முனீஸ்வரன் மனைவி சாந்தி (48). இவரது மகன் சூரியநாராயணன் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டார். அப்போது தனக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும். அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சண்முக சுந்தரம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சாந்தி ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். இதே போல் செல்லத்தம்பி, பவித்ரா, பழனிக்குமார், முத்துப்பாண்டி உள்ளிட்டோரிடமும் இதுவரை மொத்தம் ரூ.74 லட்சம் பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றி யதாக சாந்தி தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலை யத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் சண்முகசுந்த ரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மாயராஜலட்சுமி விசாரித்து வருகிறார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?