வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!
வேலூர், நவ. 11-
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 11 அளவில் திமுக கூட்டணி சார்பில் SIRஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து
திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல. சந்திரகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப், காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் டீக்காராமன் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?