வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?
Jan 12 2026
12
அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானம் பறக்கவிடப்பட்டது மற்றைய நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும்போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே விமானம் (Boeing E-4B Nightwatch - போயிங் இ-4பி நைட்வாட்ச்) பறக்கவிடப்படும். இந்த விமானத்துக்குள் இருந்தவாறே அரசை இயக்கும் அளவுக்கு வசதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 51 ஆண்டுகால வரலாற்றில் கடந்த வாரத்தில் அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானத்தைக் கண்டதாக பலரும் தெரிவித்தனர். பதற்ற நிலையின்போது மட்டுமே இந்த விமானம் பறக்க விடப்படும் என்பதால், அந்நாட்டு மக்கள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், அந்த சமயத்தில் டூம்ஸ்டே விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள்தான் பயன்படுத்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் இடம்பெற்றுள்ள டூம்ஸ்டே, மிகவும் ரகசியமான ஒரு போர் விமானம். தரையில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை வரும்போது, அதிபரும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இந்த விமானத்தைப் பயன்படுத்திக் கொள்வர். இந்த விமானத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், அறைகள் உள்ளிட்ட தேவையான வசதிகள் இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானத்தில் இருந்தவாறு ராணுவ கட்டளைகள் மட்டுமின்றி, அணு ஆயுதத் தாக்குதல் உத்தரவைக் கூட பிறப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?