வாடிப்பட்டியில் கபாடி வாலிபால் விளையாட்டு போட்டிகள் தாசில்தார்ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்
Jan 24 2026
12
வாடிப்பட்டி, ஜன.25-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலா ன தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளில் துவக்க நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் முருகேசன் வரவேற்றார். இந்த விளையாட்டு போட்டியில் மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கபாடி மற்றும் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். முடிவில் பள்ளி மேலாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?