இன்று (08.11.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் தெருநாய்களை கட்டுபடுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்க தக்கது.
தினமும் ஒரு குறள், சிந்திக்க ஒரு நொடி, ஆகிய தொகுப்பும், ஆசிய தடகள போட்டியில் இரண்டு பதக்கம் வென்றார் குமரி SI திலீபனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் 💐
நலம் தரும் மருத்துவம் பகுதியில் கல்லீரல் குறைபாடுகளை கையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்ற அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
கூறல் மீன் பற்றிய செய்தி வியப்பாக உள்ளது.வாழ்ந்தே தீர்வோம் சிறுகதை விறுவிறுப்பாக செல்கிறது, யோகங்கள் அதன் பலன்களும் தொகுப்பு மூலம் ஜொதிட தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் திருமணத்திற்கு முன்பு அசாதாரண நிபந்தனை வரவேற்க தக்கது, விவாகரத்து வழக்கு தொகுப்பு நகைச்சுவையாகவும் வியப்பாகவும் இருந்தது.
வாழ்வும் தரும் மருத்துவம் பகுதியில் மீன்யின் மருத்துவ குணம், செங்காந்தள் மலர் மருத்துவம் குணம் ஆகிய தகவல்கள் மிகவும் அருமை, சுற்றுலா தொகுப்பு மிகவும் சிறப்பு இப்படி பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு குறையாமல் செய்திகளை தொகுத்து வழங்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு நன்றிகள் பல!!!
T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?