
இன்று (08.07.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ராப் பற்றிய செய்திகள் அதிலும் அமெரிக்கா அதிபர் எல்லா பிரச்சினைகளுக்கும் வர்த்தகத்தின் மூலம் தீர்வு காண நினைப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
சிந்திக்க ஒரு நொடி ரவுசு ரமணி ஆகிய தொகுப்பு சிறப்பு. வீட்டுமனை விற்பனை விளம்பர வழிகாட்டி நெறிமுறைகள் வரவேற்க தக்கது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஆளி விதை நன்மைகள் அனைவருக்கும் பயன் அளிக்கும்.
பூஜையில் எந்த இலை வைத்து வழிபாட்டால் என்ன பலன், தினமும் ஒரு தலைவர்கள் பகுதியில் இலங்கையின் N.M.பேரேரா மற்றும் நேற்று (07.07.2025) வெளியான நம் சௌராட்டிர சமூகத்தைச் சார்ந்த L.K.துளசிராம் ஆகியோர் பற்றி பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
சமையல் அறை ஸ்பெஷல் பகுதியில் ஆந்திரா ஸ்டைல் பூண்டு பருப்பு பொடி செய்முறை காணவில்லை.
சுற்றுலா கழுகு மலை தொகுப்பு சிறப்பு, திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு செய்தி மற்றும் புகைப்படங்கள் அருமையோ அருமை!!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியினை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் மற்றும் TNPLல் முதல் முறையாக வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐 நன்றி 🙏
T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?