வாசகர் கடிதம் (P. கணபதி)12.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி)12.08.25


பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து.அரியர்ஸ் வைத்துள்ள 20000 மாணவர் நிலை பற்றி முன்னதாகவே சிந்தித்திருந்தால் தேவை இல்லாத மன உளைச்சலைத் தவிர்க்கலாமே. 


புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் திட்டத்திற்கு CBSE நிர்வாகக் குழு தரப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாம். இந்தியக் கல்வியின் தரம் எதிர் நோக்கும் மற்றொரு சவால். பாவம் மாணவர்கள். 


புதுமைப் பெண் ரமணி, நல்ல யோசனை --- இரண்டு சிறுகதைகளும் சிறந்த கற்பனைகள் தாம். இந்த Utopian தீம் யதார்த்தத்திற்கு முரண்படும் illogical reasoning என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 


திருமதி. பானுமதி நாச்சியார் அவர்களின் கவிதை அருமை. ஆடுகின்றானடி தில்லையிலே என்ற திரை இசையின் மெட்டில் கவிதை யாத்துள்ளார். சற்றும் லயம் பிசிறு தட்டவில்லை. மூன்று ஸ்டான்சாவில் முடித்து விட்டாரே என்றுதான் ஏங்க வைத்தது. சிறந்த கவிதை. பாராட்டுக்கள். 


இளம் படைப்பாளி அ. வி. தனுஷ்காவிற்கு பாராட்டுக்கள். தாய்ப்பாசத்தையும், நட்பு நேசத்தையும் மூன்று சிறிய கவிதைகளில் சிறப்பாக மொழிந்துள்ளார். ஆர்வத்தை வாழ்த்தி வரவேற்கிறேன். படைப்பில் ஆர்வம் காட்டுவதைப் போல் படிப்பிலும் கவனம் கொள்ளுங்கள். இளம் படைப்பாளருக்கும் ஊக்கமளிக்கும் இ இதழும் பாராட்டுக்குரியதே.


திரு. வெ. ஆசைத்தம்பி அவர்களின் வாசகர் கடிதத்தில் "நாட்டைக் காப்பதற்காக அதிகாரங்களுடன் அமைக்கப்பட்ட அமைப்புகள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு சட்டத்துக்கு புறம்பான காரியங்கள் செய்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டி இருப்பது அறிவு சார்ந்தோரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. நல்ல அவதானிப்பு. பாராட்டுக்கள். இன்னொரு கடிதத்தில் மாற்று முகமாக "எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகளாக செயல்படும் மலிந்த அரசியல் மக்கிப்போவதாக" என்ற வசைச் சொற்களும் கவனம் பெறுகின்றன.


பல்சுவைப் பகுதியில் உள்ள படைப்புகள் (N. S. கிருஷ்ணன்) சுவையான செய்திகள். படைத்தவர் பெயரில்லையே!


பாக். ராணுவத் தளபதி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கிறார் அணையைத் தகர்ப்போம், உலகில் பாதியை அழிப்போம் என்று. தீவிரவாதம் தழைத்தோங்கும் நாட்டவரிடம் புத்தரின் பொன்மொழிகளையா எதிர்பார்க்க முடியும்?


P. கணபதி

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%