
2024ல் நடந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் தவறுகள் தான் எங்கள் தோல்விக்கு காரணம். ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் செத்துவிட்டது என்ற ராகுல் அவர்களின் பேச்சும், அது பொறுப்பற்ற பேச்சு, ஆணைய அதிகாரி கள் பொருட்படுத்த வேண்டாம் என்ற ஆணையத்தின் பதிலடியும் சாரமுள்ள செய்திதான்.
சிறந்த நடிப்பாலும் நகைச்சுவைத் திறனாலும் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்திருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற மதன் பாப் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கும் செய்தி. RIP.
பாலியல் வழக்கில் சிக்கிய VIP பிரஜ்பல் ரேவண்ண வுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை அளித்த சிறப்பு நீதி மன்ற நீதிபதிக்கு ஜே.
17 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை மருத்துவர் ஐயா அவர்கள் அறிவிக்க, 9 ஆம் தேதியே அவரது மகன் போட்டி கூட்டம் அறிவிக்கிறார். புலி எட்டடி குட்டி பதினாரடி!!
மியான்மரில் ராணுவ ஆட்சி மறைந்து மக்களாட்சி மலரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது .
நடேஷ் கன்னா அவர்களின் வரிகள் ஆழ்ந்த சிந்தனைக்கு
அறுசுவை விருந்து.
அட்சரம் லட்சம் பெறும் நெல்லை குரலோனின் மாற்றி யோசித்த மணித்தமிழ் வரிகள். அது Lateral thinking உடன் literal value வை இழைத்து நெய்த காஷ்மீர் கம்பளம். மூன்று முறை படித்தேன் கதகதப்புக்காக.
விட்டமின் D மிகுந்துள்ள உணவுகள் பற்றிய குறிப்பு பயனுள்ள தகவல்.
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் மற்றும் சரோஜினி நாயுடு அம்மையார் - வாழ்க்கை சரிதம் அனைவரும் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய அரிய பொக்கிஷம். பெண்ணாய்ப் பிறந்து எதிர்ப்புகளைத் தகர்த்து விண்ணளவு சாதனைகளை விளைச்சலாக்கிய வீர மங்கையரின் பயணம் வியக்க வைக்கிறது.
நாளை சந்திப்போம்.
P. கணபதி
பாளையங்கோட்டை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?