வாசகர் கடிதம் (P. கணபதி)

வாசகர் கடிதம் (P. கணபதி)


நமது தமிழ்நாடு இ இதழ் தளத்தின் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். 

இன்றைய எனது கடிதம் வழக்கமான விமரிசனக் கடிதமல்ல. மாறாக ஒரு தூண்டுதல் கடிதம். ஒரு வேண்டுகோள் கடிதம். 


நம் படைப்புகள் அனைத்தும் நமது புகைப்படத்துடன் தமிழ்நாடு இ இதழில் வெளிவருவது கண்டு உ ற்சாகம் அடைகிறோம். ஊக்கம் பெறுகிறோம். பரவசம் அடைகிறோம். படைப்புகளைக் குவிக்கிறோம். அவை அனைத்தும் திருத்தப்படுவதில்லை. தணிக்கை செய்யப்படுவதில்லைசார்பு நிலை கொண்டு சலிக்கப்படுவதில்லை நமது தமிழ்நாடு இ இதழ் குழுமம் அவற்றை அப்படியே (in as is where is condition) வெளியிடுகிறது. அதுவும் "இலவசமாக" என்பது தான் மிகவும் ஹை லைட்டானா அம்சம். நாமும் மகிழ்கிறோம். 


கடும் போட்டிகள் நிறைந்த தற்கால பதிப்பு உலகம், இன, மொழி, கட்சி, சாதி, சமய மற்றும் லாப நோக்குகளின் சார்பு கொண்டது. இந்நிலையில் இன்று நாம் ஒரு வணிக இதழுக்கு நமது படங்களையும், படைப்புகளையும் அனுப்பினால் அதன் பிரசுரம் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது அறிவார்ந்த வாசக சொந்தங்கள் அறியாததல்ல. சுலபமாக நாம் வெற்றி பெறுவதற்கு certainly no chance at all. 


நமக்கு இப்படிப்பட்ட ஒரு களம் அமைத்துக் கொடுத்து கை தூக்கி விடும் நிறுவனத்துக்கு கைமாறு செய்ய வேண்டியது நமது தார்மீகக் கடமை அல்லவா? இதே வினாவை முன்வைத்து முனைப்புக் காட்டச் சொன்னவர் வாசக அன்பர் திரு. நெல்லை குரலோன் அவர்கள். எனவே தமிழ்நாடு இ இதழ் வாசகர் எண்ணிக்கை ஒரு கோடி என்னும் இலக்கை எட்டும் முயற்சியில், ஸ்ரீ இராமபிரானுக்கு உதவிய அணில்பிள்ளை போல, நாம் ஒரு துகளை எடுத்துப் போட்டாலும் போதுமே! 


ஒவ்வொரு வாசகரும் தவறாமல் தம்மைச் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் ஐந்து அன்பர்களை தமிழ்நாடு இ இதழ் நோக்கி ஆற்றுப்படுத்தினாலே கனவு மெய்ப்பட்டுவிடுமே.


போர் என்பது முதலில் பிரச்சாரக் களத்தில் தான் வென்றெடுக்கப் படுகிறது. போரில் பெறும் வெற்றியே எல்லா செயல்களையும் நியாயப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த உண்மைதான் இந்த நீண்ட கடிதத்திற்கான காரணம். அதிகபட்ச அன்பர்களை நமது இ இதழ் நோக்கி ஆற்றுப்படுத்துவதே நமது லட்சியம். வாசகர் தொகை ஒரு கோடியை எட்டுவது நிச்சயம். சாதனை படைக்கவிருப்பது சத்தியம். மீண்டும் வலியுறுத்துகிறேன் - வாசகர்களாகிய நாம் தமிழ்நாடு இ இதழின் மேன்மைக்கு நமது பங்களிப்பாக மேற்கூறியபடி வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவோமாக. அது நமது தார்மீகக் கடமை. 


அடுத்து திரு. நெல்லை குரலோன் அவர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைப் போட்டியில் (பரிசு ரூபாய் 1000) இணைந்து கொள்ள வாசக அன்பர்களுக்கு நினைவுறுத்துகிறேன். தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள். தமிழ்நாடு இ இதழின் பொலிவை மேலும் மெருகேற்ற உதவுங்கள். இலட்சியத்தை எட்டும் கூட்டுமுயற்சியில் கைகோர்த்திட உங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன். 


இந்த முயற்சிகளை முன்னெடுக்கும் யாருக்கும் எவ்வித லாப நோக்கமோ, ஊதிய உந்துதலோ கிடையாது என்பது உண்மை. இம்முயற்சியில் தார்மீக உணர்வோடு, கைமாறாக உதவும் அறத்தின்பாற்பட்ட செயல்பாடே முன்னிலை. 


இந்தக் கடித மொழிகளை ஆணையாகவோ, ஆலோசனையாகவோ, தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண்டாம். அப்படி செயல்படும் தகுதியும் எனக்குக் கிடையாது என்பதை நான் நன்கறிவேன். இது எனது வேண்டுகோள் மட்டுமே. உங்களிடம் உரிமை எடுத்துக் கொண்டே உரைக்கின்றேன். 


கூட்டுமுயற்சி என்பது நமது இன்வெஸ்ட்மென்ட். 

கோடி வாசகர் இலக்கு என்பது டிவிடெண்ட். 


சிந்திப்பீர்! செயல்படுவீர்!! வெற்றி நிச்சயம். நன்றிகள் பல. 


"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை 

செய்நன்றி கொன்ற மகற்கு. "


P. கணபதி.

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%