வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 23.07.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 23.07.25


வாசகர் கடிதம் பகுதியில் என் பெயரையும் நண்பர் நெல்லை குரலோன் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


சசிகலா விஸ்வநாதன் எழுதிய "பால் பொங்கியது" எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் , பாலை பொங்க விட்டதாக எழுதிய முகநூல் பதிவுகளை நினைவூட்டியது.


பானுமதி நாச்சியார் எழுதும் " ஊர்மிளை" தொடரில், லஷ்மணன் தொட்டிலில் சிறு குழந்தையாக இருந்த போது வீறிட்டு அழ, வசிஷ்டரின் அறிவுரைப்படி வரிசையை இடம் மாற்றி ராமன் அருகில் வைத்ததும் அழுகை நின்றதாக ஜனகர் ஊர்மிளையிடம் சொன்னது அருமை. பரந்தாமன் பாற்கடலில் துயில பஞ்சணையாக இருந்தவன் என்பதால் ஷண நேரமும் பிரியாதிருக்க அவ்வாறு அழுதானோ? எனத் தோன்றியது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%