வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 15.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 15.08.25


தமிழ்நாடு இ பேப்பர்  குழுமத்தின் ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் லட்சோப லட்சம் வாசக நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துகள் ! 


" ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா " என்று நமது பாரத குடியரசு தலைவர் பெருமையுடன் பேசி இருக்கிறார். 


இன்று நமது நாட்டில் நடக்கும் நடப்புகளை உலகின் அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார் என்று பொருள் கொள்ள வேண்டும். வாழ்க  ஜனநாயக தாயகமான நம் நாடு ! 


தங்கள் உரிமைகளுக்காக போராடிவரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சில சலுகைகளை மாநில அரசு அளித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எந்த தொழிற்சங்கம் போராடினாலும் அவை கேட்கும் முக்கிய கோரிக்கைகளை விட்டுவிட்டு ஏதாவது சலுகைகளை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த அரசு நினைப்பது வாடிக்கையாகி விட்டது.


ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக 44 பேர் இறந்து இருக்கிறார்கள். சுமார் 200 பேர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.


மேக வெடிப்பு என்ற வார்த்தையை பழைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் மேக வெடிப்பு காரணமாக அதீத மழை பொழிவு ஏற்பட்டு சில கிராமங்களே காணாமல் போய் விடுகின்றன.


மேக வெடிப்பு போன்ற செயல்களின் மூலம் இயற்கை தன்னை சீரழித்த மனிதர்களை பழி வாங்குகிறது என்றே தோன்றுகிறது.


               ********


வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%