
தமிழ்நாடு இ இதழின் டீமுக்கும், வாசக சொந்தங்களுக்கும் வணக்கம்.
இன்றைய இதழில் --
திரு. கல்யாண்குமாரின் "எழுத்தாளன் பெண்டாட்டி" கவிதை அருமை.
பைரவி, அந்த மனசு தான் கடவுள் - சிறுகதை இரண்டிலும் கருத்தாழம் சற்று கூட்டியிருக்கலாம்.
பைரவியில் எழுத்துப் பிழைகள் ஏராளம். அவர் புரூப் ரீடிங்கில் கவனம் செலுத்துவது நல்லது.
சேலம் தமிழழகன் அவர்களின் "கவிதை வாழ்கிறது" சூப்பர்.
குட்டி மாலு அம்மையார் அவர்களின் சிறைக்கு அஞ்சாத நெஞ்சுரமும், சளைக்காத சமூகத் தொண்டும் வியக்க வைக்கிறது.
பெயரில் என்ன இருக்கிறது?. (What is in a name?) என்று ஷேக்ஸ்பியரே சாதாரணமாக நினைத்த பெயரின் வீரியம் ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் டைட்டில் சர்ச்சையில் பெயரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் காணமுடிகிறது.
தமிழுக்கும், சைவநெறிக்கும் ஆற்றிய அளப்பரிய சேவை மூலம் புகழ்பெற்றவர்கள் தமிழக சைவநெறிச் செல்வர்களும், அவர்களின் ஆதீனமடங்களும். ஆனால் இன்றைய மதுரை ஆதீனம் முன் ஜாமீனுக்கு அலைவது ............
களமெழுத்துப் பாட்டு தமிழகத்தில் பலர் அறியாத விஷயம். அது பற்றிய விபரமான reporting
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பாரம்பரியத்தை கைவிடாது கொண்டாடும்
மீனச்சல் மக்களுக்கு பாராட்டுக்கள்.
திரு. நெல்லை குரலோன் அவர்களின் கட்டுரை ---- வழக்கம் போல் வாசகர்கள் வியந்து நோக்கும் தனி ஆவர்த்தனமே! அவரது கச்சேரியில் அவரோகணமே கிடையாது. என்றும் எப்போதும் ஆரோகணம் தான். பாராட்டுக்கள் சார்.
பாளை. கணபதி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?